Saturday 17 August 2013

08-06-2013 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - பொள்ளாச்சி வடக்கு கிளை துவக்கவிழா-திருமிகு. செ.முத்துசாமி Ex.MLC.,

       பொள்ளாச்சி வடக்கு வட்டார கிளை துவக்கவிழா  08.06.2013 சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் திருமிகு. செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து இயக்கப்பேருரை நிகழ்த்தி கிளையை துவக்கி வைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது.
   தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டத்தலைவர் திரு..மயில்சாமி தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் திரு.கு.சி.மணி முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி வடக்கு வட்டார அமைப்பாளர் திரு..ஆறுச்சாமி அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.


  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப்பொதுச்செயலாளர் திருமிகு. செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி கிளையைத் துவக்கி வைத்து இயக்கப்பேருரை நிகழ்த்தினார்.

        புதியகிளையின் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது, பொள்ளாச்சி வடக்கு வட்டார தலைவராக திரு..ஆறுச்சாமி, செயலாளராக திரு..கார்த்திகேயன், பொருளாளராக திருமதி.சீ.கோமதி, மகளிர் அணி தலைவராக திருமதி.கி.சந்திரா மற்றும் மகளிர் அணி செயலாளராக திருமதி..ராசாத்தி ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
     புதிய பொறுப்பாளர்கள் இயக்கத்தின் உறுதிமொழி வாசித்து பொறுப்பேற்றனர்.
    இந்த இனிய விழாவில் மாநிலச்செயலாளர் திரு.கே.காளியப்பன்,     முன்னாள் மாநிலப்பொருளாளர்,திரு.பொ.மயில்சாமி,மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு.செல்வராஜ் , மாநில மகளிர் அணித்தலைவி திருமதி அமராவதி கோவை மாவட்டச்செயலாளர் திரு..நாச்சிமுத்து ,பொருளாளர் திரு.நாராயணசாமி, மகளிர் அணித்தலைவி திருமதி.சரவணச்செல்வி மற்றும் கோவை,திருப்பூர் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களை வாழ்த்திப்பேசினர்.

விழாவில், கோடைவிடுமுறையாக இருந்தபோதிலும், செல்பேசி மற்றும் குறுந்தகவல் மூலமான செய்தியின் அடிப்படையில் பெரும்திரளான ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
     குரும்பபாளையம் பள்ளி இடைநிலைஆசிரியர் திரு..நிவாஸ் மாநிலப்பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி ex.MLC அவர்களின் 47 ஆண்டுகால இயக்கவரலாறு மற்றும் செய்த சாதனைகள் குறித்துப்பேசினார்.
        விழா ஏற்பாடுகளையும் தொகுப்பும் தொப்பம்பட்டி தலைமை ஆசிரியர் திரு.சு.கணேசன் மற்றும் ஏரிப்பட்டி பள்ளி ஆசிரியர் திரு.காளிமுத்துபரமேஸ்வரன் ஆகியோர் செய்தனர்.
 தலைமை ஆசிரியர் திரு..முருகேசன் அவர்கள் நன்றி கூறினார்.
நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவு பெற்றது

1 comment: