Wednesday 20 November 2013

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) –ன் பொதுக்குழு கூட்டம் 20.11.2013

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) –ன் பொதுக்குழு கூட்டம் 20.11.2013 புதன் காலை 11.00 மணி அளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாலர் திரு.செ.முத்துசாமி அவர்கள் தலைமை யேற்றார். தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூடடணி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகிய ஏழு அமைப்புகளின் சார்பில் உயர் மட்டக் குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. டிட்டோஜேக் கூட்டமைப்பு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தை 04.12.2013 புதன் அன்று மாலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுவதெனவும்..,
2. மாவட்ட அமைப்பாளராகப் பொறுப்பெற்று கூட்டமைப்பை ஒருங்கிணைத்து வழிநடத்திட சங்க வாரியாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவாற்றப்பட்டது.
3. கோரிக்கைகள்
1. ஆறாவது ஊதிய குழுவில் நடுவனரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2006 முதல் தமிழக அரசும் வழங்கிட வேண்டும்.
2. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை முற்றிலும் இரத்து செய்திட வேண்டும்.
3. ஆறாவது ஊதியக் குழுவில் தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும், நிர்ணயம் செய்திட வேண்டும்.
4. () FR 22 ன் படி பதவி உயர்வுக்கு 6% வழங்கிட வேண்டும்
() FR 4(3) விதியை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
5. ஆசிரியர் தகுதித்தேர்வை (TET) உடனடியாக இரத்து செய்து
வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை
அமல்படுத்திட வேண்டும்.
6. இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி தொடக்க கல்வியில் தமிழ்வழி
கல்வி முறை தொடர்ந்திட வேண்டும்.
7 . அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர், வரலாறு பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பதவி உயர்வின் மூலம்
நிரப்பிட வேண்டும்.

Monday 21 October 2013

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் ஊதியத்துக்க...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் ஊதியத்துக்க...: தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்விக்கு தடை : தமிழ்நாடுஆசிரியர் கூட்டணி கோரிக்கை மாணவர்களின் சிந்திக்கும் திறன் வலுப்பெறவும், படைப்பாற்றல் ...

Sunday 29 September 2013

கூட்டுப்போராட்டத்தினை வலியுறுத்தி ஒரு SMS போராட்டம்

மூவர் குழு அரசாணைகள்: போராட்டங்களும் தேவையும்
            ஜூலை மாதம் 22 ம் நாள் மூவர்குழு முதன் முறையாக தனது அறிக்கையை வெளியிடாமல் நேரடியாக பரிந்துரைகளின் அடிப்படையிலான அரசாணைகளை வெளியிட்டது.
          தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் வழங்கப்படுவது போல், மாநில அரசில் மற்ற துறைகளில் பட்டயப்படிப்பு பயின்று பணியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவது போல் PB-2 ல் 9300 ஊதியத்துடன் 4200 தரஉதியம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை அனைத்து சங்கத்தினராலும் கோரப்பட்டாலும் வழங்கப்படவில்லை.
      ஏன் வழங்கப்படவில்லை எனற விளக்கமும் வழங்கப்படவில்லை. 22.07.2013 அன்று வெளியிடப்பட்ட அரசாணைகளில் இது குறித்து ஆணை வெளியிடப்படவில்லை.

ஆசிரியர் கூட்டணிகளின் போராடங்கள்:
     தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் அனைத்து கூட்டணிகளும் வட்டார அளவில், மாவட்டஅளவில் அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர். கூட்டுப்போராட்ட அழைப்புகளும் விடுக்கப்பட்டு ஒருமுறை கூட்டமும் நடைபெற்றது. அடுத்த கூட்டத்தில் பொதுசெயலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தை நடத்துவது என்ற ஒரு முடிவுடன் கூட்டம் முடுவுற்றது.
   சில சங்கங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நேரடியாக சென்னையில் போராடங்களை நடத்தினார்கள். வட்டார,மாவட்ட,மாநில அளவில் போரட்டங்கள் முடிந்துவிட்டன. விளைவு?
கூட்டுபோரட்டம்: THE NEED OF THE HOUR
     அனைத்து சங்களும் தனித்தனி போரட்டங்களில் காட்டிய ஆர்வத்தினை ஏன் கூட்டுப்போராட்டத்தில் காட்டவில்லை என்று அனைத்து ஆசிரியர்களும் சிந்தித்தபோதும் சில தலைமைகள் ஆர்வம் காட்டின சில தலைமைகள் வெளிப்படையாக கருத்துக்கூறவோ ஆர்வம் காட்டவோ இல்லை. நான் சார்ந்த கூட்டணியின் பொதுச்செயலாளர் வெளிநாட்டில் இருந்த போதும் எவ்வித நிபந்தனையும் இன்றி கூட்டுப்போராட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கினார்.
நாம் என்ன செய்யவேண்டும்:
   நண்பர்களே நாம் அனைவரும் பல்வேறு காரணங்களால் வெவ்வேறு சங்களில் உள்ளோம் . ஆயினும் நாம் அனைவருக்கும் கோரிக்கை ஒன்றே அது மத்திய அரசிற்கு இணையாக 9300+4200 ஊதியம் பெற வேண்டும் எனபது மட்டுமே. நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் சார்ந்த சங்கத் தலைமையிடம் கூட்டுப்போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்ற கோரும் உரிமை உள்ளது. எனவே இன்று மாலைக்குள் நாம் அனைவரும் நாம் மாநிலத் தலைமைகளுக்கு ஒரு குறுந்செய்தி (SMS) அனுப்பலாம். முகநூலில் கோரலாம்.
சங்கத் தலைமைகளிடம் கோரிக்கை:
கூட்டுப்போரட்டத்திற்கு தயார் என உடனடியாக அறிவிக்க வேண்டும். கூட்டுப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவேண்டும். “

    நான் சார்ந்த சங்கத்தின் பொது செயலாளர் அக்டோபர் 8 நாடு திரும்புகிறார். இவர் இங்கு வந்தவுடன் கூட்டுப்போராட்ட நடவடிக்கை தீவிரம் அடையும் என்ற உறுதிப்பாடு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.இது எனது தனிப்பட்ட கருத்து . மாற்று கருத்துக்கள் இருப்பின் எனது மின்னஞ்சல் (s.nivas@live.in) ல் தெரிவிக்கவும்நிவாஸ் சண்முகவேல்.

Wednesday 11 September 2013

பொள்ளாச்சி வடக்கு-ஆச்சிபட்டி பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சு.மாரிமுத்து-மாநில நல்லாசிரியர்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஆச்சிபட்டிஊராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சு.மாரிமுத்துஅவர்கள் 2013 ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

Thursday 29 August 2013

பொள்ளாச்சி வடக்கு பொதுக்குழு–27.08.2013

             பொள்ளாச்சி வடக்கு பொதுக்குழுக் கூட்டம் 27.08.2013 மாலை 5:00 அளவில் வட்டார தலைவர் திரு.ம.ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

திரு.ம.முருகேசன் வரவேற்புரை நல்கினார்.

 

பொருளாளர் திருமதி.கோமதி, திருமதி.சந்திரா, திருமதி.ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டாரச்செயலாலர் திரு.ம.கார்த்திகேயன் அறிக்கை வாசித்து தீர்மானங்களை தாக்கல் செய்தார்.

அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது

திரு.ச.நிவாஸ் நன்றியுரை வழங்கினார்.

Monday 26 August 2013

செப்டம்பர் 5 - கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்- சில பயனுள்ள யோசனைகள்

செப்டம்பர் 5 - கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்- சில பயனுள்ள யோசனைகள்

1) மாவட்டத் தலைநகர்களில் உரிய காவல்துறை முன் அனுமதி பெறவேண்டும்.
2) மாவட்டத்தொடக்கககல்வி அலுவலர்களுக்கும் உரிய கடிதம் அனுப்பப்படல் வேண்டும்.
3) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்தில் சரியான நேரத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தொடங்கப்படவேண்டும்.
4) ஆசிரியர்களை வட்டார அளவில் திட்டமிட்டு இரு குழுக்களாக பிரித்து ஒருகுழுவினரை பிற்பகல் தற்செயல் விடுப்பு எடுத்து சரியான நேரத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தொடங்கச் சென்றுசேருமாறு வட்டார பொறுப்பாளர்கள் திட்டமிடல் நலம்.
5) அடுத்த குழுவினர் பள்ளி முடிந்தவுடன் உடனடியாக பயணித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது கலந்துகொள்ள திட்டமிடல் நலம்.
6) ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் வந்து சேர்ந்து நிகழ்ச்சி நிரல் முடியும் வரை அனைத்து ஆசிரியர்களும் இருக்குமாறு செய்ய வட்டார பொறுப்பாளர்கள் திட்டமிடல் வேண்டும்.
7) போரட்டத்தின் பலன் சென்றடைய உள்ள இடைநிலை ஆசிரியர் ஒருவர் கூட தவறாது மூத்த ஆசிரியர்களுடன் கலந்து கொள்ளவதை பொறுப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
 கடந்த 50 ஆண்டுகாலமாக பல்வேறு போரட்டக் களங்களை அமைத்து அனுபவம்மிக்க நமது பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி ஐயா அவர்களின் வழிகாட்டுதலினால் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடர்போரட்டங்களில் கலந்து கொள்ளும் எவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் வாராது என்பதினை விளக்கி அனைத்து சங்க உறுப்பினர்களையும் இந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்த்தில் கலந்து கொள்ளச் செய்து போராட்டத்தினை வெற்றி பெறச்செயவது நமது கடமை.

Saturday 17 August 2013

08-06-2013 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - பொள்ளாச்சி வடக்கு கிளை துவக்கவிழா-திருமிகு. செ.முத்துசாமி Ex.MLC.,

       பொள்ளாச்சி வடக்கு வட்டார கிளை துவக்கவிழா  08.06.2013 சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் திருமிகு. செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து இயக்கப்பேருரை நிகழ்த்தி கிளையை துவக்கி வைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது.
   தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டத்தலைவர் திரு..மயில்சாமி தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் திரு.கு.சி.மணி முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி வடக்கு வட்டார அமைப்பாளர் திரு..ஆறுச்சாமி அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.


  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப்பொதுச்செயலாளர் திருமிகு. செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி கிளையைத் துவக்கி வைத்து இயக்கப்பேருரை நிகழ்த்தினார்.

        புதியகிளையின் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது, பொள்ளாச்சி வடக்கு வட்டார தலைவராக திரு..ஆறுச்சாமி, செயலாளராக திரு..கார்த்திகேயன், பொருளாளராக திருமதி.சீ.கோமதி, மகளிர் அணி தலைவராக திருமதி.கி.சந்திரா மற்றும் மகளிர் அணி செயலாளராக திருமதி..ராசாத்தி ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
     புதிய பொறுப்பாளர்கள் இயக்கத்தின் உறுதிமொழி வாசித்து பொறுப்பேற்றனர்.
    இந்த இனிய விழாவில் மாநிலச்செயலாளர் திரு.கே.காளியப்பன்,     முன்னாள் மாநிலப்பொருளாளர்,திரு.பொ.மயில்சாமி,மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு.செல்வராஜ் , மாநில மகளிர் அணித்தலைவி திருமதி அமராவதி கோவை மாவட்டச்செயலாளர் திரு..நாச்சிமுத்து ,பொருளாளர் திரு.நாராயணசாமி, மகளிர் அணித்தலைவி திருமதி.சரவணச்செல்வி மற்றும் கோவை,திருப்பூர் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களை வாழ்த்திப்பேசினர்.

விழாவில், கோடைவிடுமுறையாக இருந்தபோதிலும், செல்பேசி மற்றும் குறுந்தகவல் மூலமான செய்தியின் அடிப்படையில் பெரும்திரளான ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
     குரும்பபாளையம் பள்ளி இடைநிலைஆசிரியர் திரு..நிவாஸ் மாநிலப்பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி ex.MLC அவர்களின் 47 ஆண்டுகால இயக்கவரலாறு மற்றும் செய்த சாதனைகள் குறித்துப்பேசினார்.
        விழா ஏற்பாடுகளையும் தொகுப்பும் தொப்பம்பட்டி தலைமை ஆசிரியர் திரு.சு.கணேசன் மற்றும் ஏரிப்பட்டி பள்ளி ஆசிரியர் திரு.காளிமுத்துபரமேஸ்வரன் ஆகியோர் செய்தனர்.
 தலைமை ஆசிரியர் திரு..முருகேசன் அவர்கள் நன்றி கூறினார்.
நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவு பெற்றது

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியத்திற்கு இணையாக 9300-34800 + 4200 தர ஊதியம் வழங்க வேண்டி அரசின் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

 கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்
                 பொள்ளாச்சி: 13-08-2013 அன்று பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “ 4200 தர இடைநிலை ஆசிரியர்களுக்கு  மத்திய அரசு ஊதியத்திற்கு இணையாக 9300-34800 +4200 தரஊதியம் வழங்க வேண்டி” அரசின் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

              வட்டார தலைவர் ம.ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ம.கார்த்திகேயன் வரவேற்புரை நல்கினார்.

                        மாவட்டத்தலைவர் திரு.மயில்சாமி அவர்கள் கோரிக்கை விளக்க உரையில் பல்வேறு ஊதியக்குழுக்களில் இடைநிலை ஆசிரியர்கள் பெற்ற விகிதங்களை ஒப்பிட்டு விளக்க உரை ஆற்றினார். சு.மாரிமுத்து மற்றும் சு.கணேசன் ஆசியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

                       ச.நிவாஸ், இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து பேசும்போது, பழைய ஊதியவிகித்ததில் பெற்ற ஊதியத்தை ஒப்பிட்டாலும் தற்பொழுது பெறும் ஊதியம் 2205 இழப்பு மற்றும் மத்திய அரசு ஊதியத்துடன் ஒப்பிட்டால் தற்பொழுது 8550 இழப்பு என்பது குறித்து விளக்கி, தமிழக அரசு உடனே மத்திய அரசிற்கு இணையான ஊதியவிகிதமான 9300-34800 மற்றும் தர ஊதியம் 4200 வழங்கவேண்டும் என வலியுறுத்திப்பேசியதுடன் நன்றியரை வழங்கினார்.

                      விழாவிற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கிய காவல்துறைக்கும், 14.08.2013 நாளிதழ்களில் செய்தி வெளியிட்ட தினமலர் மற்றும் தினகரன் பத்திரிக்கை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..