Sunday 29 September 2013

கூட்டுப்போராட்டத்தினை வலியுறுத்தி ஒரு SMS போராட்டம்

மூவர் குழு அரசாணைகள்: போராட்டங்களும் தேவையும்
            ஜூலை மாதம் 22 ம் நாள் மூவர்குழு முதன் முறையாக தனது அறிக்கையை வெளியிடாமல் நேரடியாக பரிந்துரைகளின் அடிப்படையிலான அரசாணைகளை வெளியிட்டது.
          தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் வழங்கப்படுவது போல், மாநில அரசில் மற்ற துறைகளில் பட்டயப்படிப்பு பயின்று பணியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவது போல் PB-2 ல் 9300 ஊதியத்துடன் 4200 தரஉதியம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை அனைத்து சங்கத்தினராலும் கோரப்பட்டாலும் வழங்கப்படவில்லை.
      ஏன் வழங்கப்படவில்லை எனற விளக்கமும் வழங்கப்படவில்லை. 22.07.2013 அன்று வெளியிடப்பட்ட அரசாணைகளில் இது குறித்து ஆணை வெளியிடப்படவில்லை.

ஆசிரியர் கூட்டணிகளின் போராடங்கள்:
     தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் அனைத்து கூட்டணிகளும் வட்டார அளவில், மாவட்டஅளவில் அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர். கூட்டுப்போராட்ட அழைப்புகளும் விடுக்கப்பட்டு ஒருமுறை கூட்டமும் நடைபெற்றது. அடுத்த கூட்டத்தில் பொதுசெயலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தை நடத்துவது என்ற ஒரு முடிவுடன் கூட்டம் முடுவுற்றது.
   சில சங்கங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நேரடியாக சென்னையில் போராடங்களை நடத்தினார்கள். வட்டார,மாவட்ட,மாநில அளவில் போரட்டங்கள் முடிந்துவிட்டன. விளைவு?
கூட்டுபோரட்டம்: THE NEED OF THE HOUR
     அனைத்து சங்களும் தனித்தனி போரட்டங்களில் காட்டிய ஆர்வத்தினை ஏன் கூட்டுப்போராட்டத்தில் காட்டவில்லை என்று அனைத்து ஆசிரியர்களும் சிந்தித்தபோதும் சில தலைமைகள் ஆர்வம் காட்டின சில தலைமைகள் வெளிப்படையாக கருத்துக்கூறவோ ஆர்வம் காட்டவோ இல்லை. நான் சார்ந்த கூட்டணியின் பொதுச்செயலாளர் வெளிநாட்டில் இருந்த போதும் எவ்வித நிபந்தனையும் இன்றி கூட்டுப்போராட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கினார்.
நாம் என்ன செய்யவேண்டும்:
   நண்பர்களே நாம் அனைவரும் பல்வேறு காரணங்களால் வெவ்வேறு சங்களில் உள்ளோம் . ஆயினும் நாம் அனைவருக்கும் கோரிக்கை ஒன்றே அது மத்திய அரசிற்கு இணையாக 9300+4200 ஊதியம் பெற வேண்டும் எனபது மட்டுமே. நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் சார்ந்த சங்கத் தலைமையிடம் கூட்டுப்போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்ற கோரும் உரிமை உள்ளது. எனவே இன்று மாலைக்குள் நாம் அனைவரும் நாம் மாநிலத் தலைமைகளுக்கு ஒரு குறுந்செய்தி (SMS) அனுப்பலாம். முகநூலில் கோரலாம்.
சங்கத் தலைமைகளிடம் கோரிக்கை:
கூட்டுப்போரட்டத்திற்கு தயார் என உடனடியாக அறிவிக்க வேண்டும். கூட்டுப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவேண்டும். “

    நான் சார்ந்த சங்கத்தின் பொது செயலாளர் அக்டோபர் 8 நாடு திரும்புகிறார். இவர் இங்கு வந்தவுடன் கூட்டுப்போராட்ட நடவடிக்கை தீவிரம் அடையும் என்ற உறுதிப்பாடு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.இது எனது தனிப்பட்ட கருத்து . மாற்று கருத்துக்கள் இருப்பின் எனது மின்னஞ்சல் (s.nivas@live.in) ல் தெரிவிக்கவும்நிவாஸ் சண்முகவேல்.

Wednesday 11 September 2013

பொள்ளாச்சி வடக்கு-ஆச்சிபட்டி பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சு.மாரிமுத்து-மாநில நல்லாசிரியர்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஆச்சிபட்டிஊராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சு.மாரிமுத்துஅவர்கள் 2013 ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.