Thursday 29 August 2013

பொள்ளாச்சி வடக்கு பொதுக்குழு–27.08.2013

             பொள்ளாச்சி வடக்கு பொதுக்குழுக் கூட்டம் 27.08.2013 மாலை 5:00 அளவில் வட்டார தலைவர் திரு.ம.ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

திரு.ம.முருகேசன் வரவேற்புரை நல்கினார்.

 

பொருளாளர் திருமதி.கோமதி, திருமதி.சந்திரா, திருமதி.ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டாரச்செயலாலர் திரு.ம.கார்த்திகேயன் அறிக்கை வாசித்து தீர்மானங்களை தாக்கல் செய்தார்.

அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது

திரு.ச.நிவாஸ் நன்றியுரை வழங்கினார்.

Monday 26 August 2013

செப்டம்பர் 5 - கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்- சில பயனுள்ள யோசனைகள்

செப்டம்பர் 5 - கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்- சில பயனுள்ள யோசனைகள்

1) மாவட்டத் தலைநகர்களில் உரிய காவல்துறை முன் அனுமதி பெறவேண்டும்.
2) மாவட்டத்தொடக்கககல்வி அலுவலர்களுக்கும் உரிய கடிதம் அனுப்பப்படல் வேண்டும்.
3) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்தில் சரியான நேரத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தொடங்கப்படவேண்டும்.
4) ஆசிரியர்களை வட்டார அளவில் திட்டமிட்டு இரு குழுக்களாக பிரித்து ஒருகுழுவினரை பிற்பகல் தற்செயல் விடுப்பு எடுத்து சரியான நேரத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தொடங்கச் சென்றுசேருமாறு வட்டார பொறுப்பாளர்கள் திட்டமிடல் நலம்.
5) அடுத்த குழுவினர் பள்ளி முடிந்தவுடன் உடனடியாக பயணித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது கலந்துகொள்ள திட்டமிடல் நலம்.
6) ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் வந்து சேர்ந்து நிகழ்ச்சி நிரல் முடியும் வரை அனைத்து ஆசிரியர்களும் இருக்குமாறு செய்ய வட்டார பொறுப்பாளர்கள் திட்டமிடல் வேண்டும்.
7) போரட்டத்தின் பலன் சென்றடைய உள்ள இடைநிலை ஆசிரியர் ஒருவர் கூட தவறாது மூத்த ஆசிரியர்களுடன் கலந்து கொள்ளவதை பொறுப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
 கடந்த 50 ஆண்டுகாலமாக பல்வேறு போரட்டக் களங்களை அமைத்து அனுபவம்மிக்க நமது பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி ஐயா அவர்களின் வழிகாட்டுதலினால் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடர்போரட்டங்களில் கலந்து கொள்ளும் எவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் வாராது என்பதினை விளக்கி அனைத்து சங்க உறுப்பினர்களையும் இந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்த்தில் கலந்து கொள்ளச் செய்து போராட்டத்தினை வெற்றி பெறச்செயவது நமது கடமை.

Saturday 17 August 2013

08-06-2013 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - பொள்ளாச்சி வடக்கு கிளை துவக்கவிழா-திருமிகு. செ.முத்துசாமி Ex.MLC.,

       பொள்ளாச்சி வடக்கு வட்டார கிளை துவக்கவிழா  08.06.2013 சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் திருமிகு. செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து இயக்கப்பேருரை நிகழ்த்தி கிளையை துவக்கி வைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது.
   தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டத்தலைவர் திரு..மயில்சாமி தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் திரு.கு.சி.மணி முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி வடக்கு வட்டார அமைப்பாளர் திரு..ஆறுச்சாமி அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.


  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப்பொதுச்செயலாளர் திருமிகு. செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி கிளையைத் துவக்கி வைத்து இயக்கப்பேருரை நிகழ்த்தினார்.

        புதியகிளையின் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது, பொள்ளாச்சி வடக்கு வட்டார தலைவராக திரு..ஆறுச்சாமி, செயலாளராக திரு..கார்த்திகேயன், பொருளாளராக திருமதி.சீ.கோமதி, மகளிர் அணி தலைவராக திருமதி.கி.சந்திரா மற்றும் மகளிர் அணி செயலாளராக திருமதி..ராசாத்தி ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
     புதிய பொறுப்பாளர்கள் இயக்கத்தின் உறுதிமொழி வாசித்து பொறுப்பேற்றனர்.
    இந்த இனிய விழாவில் மாநிலச்செயலாளர் திரு.கே.காளியப்பன்,     முன்னாள் மாநிலப்பொருளாளர்,திரு.பொ.மயில்சாமி,மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு.செல்வராஜ் , மாநில மகளிர் அணித்தலைவி திருமதி அமராவதி கோவை மாவட்டச்செயலாளர் திரு..நாச்சிமுத்து ,பொருளாளர் திரு.நாராயணசாமி, மகளிர் அணித்தலைவி திருமதி.சரவணச்செல்வி மற்றும் கோவை,திருப்பூர் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களை வாழ்த்திப்பேசினர்.

விழாவில், கோடைவிடுமுறையாக இருந்தபோதிலும், செல்பேசி மற்றும் குறுந்தகவல் மூலமான செய்தியின் அடிப்படையில் பெரும்திரளான ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
     குரும்பபாளையம் பள்ளி இடைநிலைஆசிரியர் திரு..நிவாஸ் மாநிலப்பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி ex.MLC அவர்களின் 47 ஆண்டுகால இயக்கவரலாறு மற்றும் செய்த சாதனைகள் குறித்துப்பேசினார்.
        விழா ஏற்பாடுகளையும் தொகுப்பும் தொப்பம்பட்டி தலைமை ஆசிரியர் திரு.சு.கணேசன் மற்றும் ஏரிப்பட்டி பள்ளி ஆசிரியர் திரு.காளிமுத்துபரமேஸ்வரன் ஆகியோர் செய்தனர்.
 தலைமை ஆசிரியர் திரு..முருகேசன் அவர்கள் நன்றி கூறினார்.
நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவு பெற்றது

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியத்திற்கு இணையாக 9300-34800 + 4200 தர ஊதியம் வழங்க வேண்டி அரசின் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

 கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்
                 பொள்ளாச்சி: 13-08-2013 அன்று பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “ 4200 தர இடைநிலை ஆசிரியர்களுக்கு  மத்திய அரசு ஊதியத்திற்கு இணையாக 9300-34800 +4200 தரஊதியம் வழங்க வேண்டி” அரசின் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

              வட்டார தலைவர் ம.ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ம.கார்த்திகேயன் வரவேற்புரை நல்கினார்.

                        மாவட்டத்தலைவர் திரு.மயில்சாமி அவர்கள் கோரிக்கை விளக்க உரையில் பல்வேறு ஊதியக்குழுக்களில் இடைநிலை ஆசிரியர்கள் பெற்ற விகிதங்களை ஒப்பிட்டு விளக்க உரை ஆற்றினார். சு.மாரிமுத்து மற்றும் சு.கணேசன் ஆசியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

                       ச.நிவாஸ், இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து பேசும்போது, பழைய ஊதியவிகித்ததில் பெற்ற ஊதியத்தை ஒப்பிட்டாலும் தற்பொழுது பெறும் ஊதியம் 2205 இழப்பு மற்றும் மத்திய அரசு ஊதியத்துடன் ஒப்பிட்டால் தற்பொழுது 8550 இழப்பு என்பது குறித்து விளக்கி, தமிழக அரசு உடனே மத்திய அரசிற்கு இணையான ஊதியவிகிதமான 9300-34800 மற்றும் தர ஊதியம் 4200 வழங்கவேண்டும் என வலியுறுத்திப்பேசியதுடன் நன்றியரை வழங்கினார்.

                      விழாவிற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கிய காவல்துறைக்கும், 14.08.2013 நாளிதழ்களில் செய்தி வெளியிட்ட தினமலர் மற்றும் தினகரன் பத்திரிக்கை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..